போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் பல நாள் மீன்பிடிப்படகுடன் அறுவர் கைது
கடற்பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்களின் ஒரு பகுதியாக இந்த சுற்றி வளைப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகொன்றுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
கடற்பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்களின் ஒரு பகுதியாக இந்த சுற்றி வளைப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது சந்தேகத்துக்கிடமாக பயணித்த மீன்பிடி படகொன்றை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அதற்கமையவே குறித்த படகிலிருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த படகுடன் கரைக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.