ஷிரந்தியிடம் நான்கு மணி நேரம் விசாரணை
மஹிந்த ராஜபக்ஷ சகிதம் அவ்விடத்துக்கு வந்த ஷிரந்தி ராஜபக்ஷ, பின்னர் வகனத்தில் இருந்து தனியாக இறங்கி அங்கு ஏற்கனவே வந்ததிருந்த தனது சட்டத்தரணிகளுடன் நிதி குற்றப்புலனய்வு பிரிவில் ஆஜரானார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ எம்.பி ஆகியோரிடத்தில் சுமார் 4 மணி நேரம் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் 03-02-2026 அன்று விசாரணை நடத்தினர்.
காலை 10 மணியளவில் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைக்கப்ப்ட்ட அவர், முற்பகல் 9.30 மணியாகும் போது பழைய பொலிஸ் தலைமையகம் அமைந்துள்ள கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜரானார். இதன்போது அவருக்கு ஆதரவாக பெருமளவிலான அவரது ஆதரவாளர்களும், அரசியல்வாதிகளும் அங்கு ஒன்றுகூடினர்.
மஹிந்த ராஜபக்ஷ சகிதம் அவ்விடத்துக்கு வந்த ஷிரந்தி ராஜபக்ஷ, பின்னர் வகனத்தில் இருந்து தனியாக இறங்கி அங்கு ஏற்கனவே வந்ததிருந்த தனது சட்டத்தரணிகளுடன் நிதி குற்றப்புலனய்வு பிரிவில் ஆஜரானார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 27ஆம் திகதி பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், அன்றைய தினம் தான் ஆஜராக முடியாது என்றும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் சட்டத்தரணி மூலம் பொலிஸாரிடம் கோரியிருந்தார். எனினும் இரு வார கால அவகாசம் அளிக்காத பொலிஸார் அவரை நேற்று விசாரணைக்கு அழைத்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 'சிரிலிய' என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கில் நிதி முறைகேடுகள் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த கணக்கு, ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட மூன்று பேரின் கூட்டு கணக்காக, மருதானை, சுதுவெல்ல இலங்கை வங்கி கிளையில் திறக்கப்பட்டிருப்பதும் ஷிரந்தி ராஜபக்ஷவின் தேசிய அடையாள அட்டை எண் ‘222 222 222’ என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அந்த கணக்கின் மூலம் பல சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே கடந்த 2015 ஜூன் 1 அன்று, அப்போதைய சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஷிரந்தி ராஜபக்ஷவிடமிருந்து இது தொடர்பில் முதல் வாக்குமூலம் பெறப்பட்டது.
எனினும் அதன் பின்னர் அது குறித்த விசாரணைகள் வினைத்திறனாக முன்னெடுக்கப்படாத நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு அவ்விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே ஷிரந்தி ராஜபக்ஷ மீண்டும் விசாரணைக்கு அழிக்கப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.
ஷிரந்தி ராஜபக்ஷவிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தை ஆராய்ந்த பின்னர் அவசியம் ஏர்படின் மீண்டும் அழைப்பதாக கூறி பொலிஸார் அவரை விடுவித்தனர்.





