துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை கையளிப்பு
மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்ச்சியங்களை பரிசிலீத்த நீதிபதி பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
கொழும்பு – ஹேவலாக் சிட்டி சொகுசு தொடர்மாடி குடியிருப்பிலிருந்து தங்க முலாம் பூஸப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தில், மீண்டும் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட முன்னால் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதிவாதியான துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்திருந்தது. மேற்படி வழக்கு 10-09-2026 அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ்ரனதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணைக்கு அமைய, பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் அஸ்குல் ஷெரகசினா என்ற கசகஸ்தான் நாட்டுப் பெண் ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை திறந்த நீதிமன்றத்தில் பிரதிவாதிகளிடம் கையளிக்கப்பட்டது.
பிரதிவாதி துமிந்த திசாநாயக்க சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் விடயங்களை முன்வைக்கையில், தனது சேவைபெறுநருக்கு ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசிலீத்த நீதிபதி பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்படி, பிரதிவாதிகள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், பிரதிவாதிகளின் கைவிரலடையாளங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பணித்தது. மேற்படி வழக்கின், வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்று கூடலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி நடத்துவதுக்கு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.





