உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி பயன்பாடு குறித்து ஜனாதிபதி அறிவுறுத்தல்
உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி பயன்பாட்டை முறையாக முகாமைத்துவத்திற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் 23-03-2026 அன்று கலந்துரையாடுமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி பயன்பாட்டை முறையாக முகாமைத்துவத்திற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ள எரிசக்தி விநியோகத்திலான சவால்களுக்கு மத்தியில், ஒரு நாடாக நாம் வலுசக்தியைச் சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக அரச சேவையின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது மற்றும் மேற்கொண்டு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த சில வாரங்களாக எரிசக்தி முகாமைத்துவத்திற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை மேலும் நடைமுறைச் சாத்தியமான நிலைக்குக் கொண்டு வருவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், குறிப்பாக அரச சேவைக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டல்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி பயன்பாட்டை முறையாக முகாமைத்துவத்திற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் 23-03-2026 அன்று கலந்துரையாடுமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் நாளந்த வலுசக்தி நுகர்வு அதிகமாகக் காணப்படும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தி நுகர்வைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு துறையினதும் மற்றும் ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டு, ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு சிறந்த முகாமைத்துவத்துடனும் சிக்கனத்துடனும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.





