அனுமதியற்ற வகையில் நினைவுத்தூபி பூமிக்குள் செல்ல விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் முயற்சி
அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்துக்கு வந்த விமல் வீரவன்ச உட்பட அவரது ஆதரவாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் செல்வற்கு முற்பட்டனர்.
வடக்கு மற்றும் கிழக்கில் புலி போராளிகளுக்கு நினைவேந்தலை அனுஸ்டிக்க முடியுமாயின் ஏன் தெற்கில் இராணுவத்தினரை எம்மால் நினைவுகூர முடியாது என பொலிஸாருடன் முரண்பட்ட விமல் வீரவன்ச,தரையில் தடுக்கிட்டு விழுந்து பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் பத்தரமுல்ல இராணுவ நினைவுத்தூபி வளாகத்தில் இராணுவ வெற்றி தின நிகழ்வு கொண்டாடப்படவுள்ளதால் நிகழ்வுக்கான ஒத்திகையில் முப்படையினரும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்துக்கு வந்த விமல் வீரவன்ச உட்பட அவரது ஆதரவாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் செல்வற்கு முற்பட்டனர்.
அப்போது அவ்விடத்தில் இருந்த பொலிஸார் ஒத்திகை இடம்பெறுதால் நினைவுத்தூபி வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதன்போது பொலிஸாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விமல் வீரவன்ச 'வடக்கில் புலி போராளிகளுக்கு அரச ஆதரவுடன் நினைவேந்தல் இடம்பெறுகிறது. புலிகள் அமைப்பின் பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன, அங்கு ஏன் தடைகளை விதிக்கவில்லை. இங்கு ஏன் எமக்கு தடைகளை விதிக்கின்றீர்கள் என கடுமையாக பேசினார்'
இதற்கு பதிலளித்த பொலிஸார் ' இந்த இடத்தில் பிரச்சினை ஏற்படுத்த வேண்டாம். எவருக்கும் உள் செல்வதற்கு அனுமதியில்லை. பாதுகாப்பு காரணிகளின் நிமித்தமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டனர்.





