வல்லரசு போட்டியின் சமரச புள்ளி
வல்லரசுப் போட்டிகள் தீவிரமடைந்து வரும் தற்காலச் சூழலில், உலக அமைதியும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இந்த இரு மாபெரும் நாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளன என்பதை இந்த விஜயம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியது.
'டொனால்ட் ட்ரம்பின் சீன விஜயமும் ஷி ஜின் பிங்குடனான சந்திப்பும் வெளிப்படுத்தியுள்ள பூகோள அரசியல் சமிக்ஞை'
பூகோள அரசியல் ஒழுங்கில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான நகர்வுகள் உலகளாவிய அரசியலின் திசையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமானது, இருதரப்பு உறவுகளுக்கு அப்பாற்பட்டு உலகளாவிய ரீதியில் ஒரு புதிய பூகோள அரசியல் மாற்றத்திற்கான அடித்தளமாக அமைந்துள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அபரீதமான பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சியை எதிர்கொள்ளும் அதேவேளையில் அமெரிக்காவின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாய நகர்வாகவே இந்த விஜயம் அமைந்திருந்தது.
பீஜிங்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் ஜனாதிபதி ட்ரம்பிற்கு சீனா அளித்த பிரம்மாண்டமான வரவேற்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான பனிப்போர் காலத்து இராஜதந்திர அணுகுமுறைகளிலிருந்து மாறுபட்டு, சமகால யதார்த்தங்களை ஒப்புக்கொள்ளும் புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்தியிருந்தது.
பூகோள அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது, இந்த விஜயமானது 'அமெரிக்காவுக்கே முதலிடம்' (யுஅநசiஉய குசைளவ) என்ற ட்ரம்பின் தேசியவாதக் கொள்கைக்கும், 'சீனக் கனவு' (ஊhiநௌந னுசநயஅ) மற்றும் 'ஒரே மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சி' (டீநடவ யனெ சுழயன ஐnவையைவiஎந) போன்ற ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் உலகளாவிய விரிவாக்கக் கொள்கைக்கும் இடையிலான சமரசப் புள்ளியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் பாரம்பரிய செல்வாக்கு குறைந்து வருவதாகக் கருதப்பட்ட காலகட்டத்தில், ட்ரம்ப் நேரடியாக சீனத் தலைமையைச் சந்தித்தமையானது உலகளாவிய அதிகார சமநிலையை மறுசீரமைக்கும் முயற்சியாகும்.
குறிப்பாக, தென் சீனக்கடல் விவகாரம் மற்றும் தாய்வான் மீதான சீனாவின் உரிமை கோரல்கள் போன்ற தீவிரமான இராணுவ முரண்பாடுகளைக் தற்காலிகமாகக் கடந்து, இரு நாடுகளும் பொருளாதார ரீதியான பரஸ்பர தேவைகளை முன்னிலைப்படுத்தியமை உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.
இந்த விஜயத்தின் மிக முக்கியமான பூகோள அரசியல் காரணியாக அமைந்தது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரப் போட்டித்தன்மையாகும்.
அமெரிக்க உற்பத்திகளைப் பாதுகாத்தல் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்புகள் குறித்து ட்ரம்ப் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த பின்னணியில், இந்த விஜயத்தின் போது 250 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இது வெறும் வர்த்தக ஒப்பந்தங்களாக மட்டும் பார்க்கப்படாமல், உலகப் பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை விடுத்து, உலகளாவிய விநியோகச் சங்கிலியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான ஒரு கூட்டு உத்தியாகவே சர்வதேச பொருளியல் வல்லுநர்களால் மதிப்பிடப்பட்டது.
மறுபுறம், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதில் சீனாவின் பங்கை வலியுறுத்துவது ட்ரம்பின் இந்த விஜயத்தின் பிரதான அரசியல் நோக்கமாக இருந்தது.
பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு மாபெரும் சவாலாக விளங்கும் வடகொரியாவைத் தடுத்து நிறுத்த, அதன் மிக நெருங்கிய நட்பு நாடான சீனாவின் உதவி அமெரிக்காவுக்கு அவசியமாக இருந்தது.
இந்தச் சந்திப்பின் மூலம், கொரிய தீவகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், அணு ஆயுத ஒழிப்பை சாத்தியமாக்குவதற்கும் பீஜிங் மற்றும் வொஷிங்டன் ஆகிய இரு தரப்பும் இணைந்து செயற்பட வேண்டியதன் பூகோள அரசியல் அவசியத்தை ட்ரம்ப் மிகத் தெளிவாக உணர்த்தியிருந்தார்.
இது ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் ஒரு புதிய பாதுகாப்பு சமிக்ஞையை வழங்கியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இருப்பினும், இந்த வரலாற்று விஜயமானது உலகளாவிய ரீதியில் பல புதிய முரண்பாடுகளுக்கும், புதிய கூட்டணி உருவாக்கங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
அமெரிக்கா தனது பொருளாதாரப் பலத்தைப் பயன்படுத்தி சீனாவைத் தன்வசப்படுத்த முயன்ற அதேவேளையில், சீனா தனது மென்பல இராஜதந்திரத்தை பயன்படுத்தி உலக அரங்கில் தன்னை அமெரிக்காவிற்கு இணையான ஒரு மாபெரும் சக்தியாகக் காட்டிக்கொண்டது.
ட்ரம்பின் 'அமெரிக்காவுக்கே முதலிடம்' கொள்கையினால் உலகளாவிய பன்முகத்தன்மை பலவீனமடைந்த சூழலைச் சாதகமாக்கிக் கொண்ட சீனா, உலகளாவிய வர்த்தகம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தொடங்கியது.
இதனால், ட்ரம்பின் சீன விஜயத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச அரசியல் இருமுனை முகாமாக மாறத் தொடங்கியமை தெளிவாகப் புலனாகிறது.
அத்துடன், இந்த விஜயத்தின் தாக்கம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா போன்ற இதர உலகளாவிய சக்திகளின் வெளியுறவுக் கொள்கைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்குள் ஒரு புதிய பூகோள அரசியல் உடன்பாட்டை எட்ட முற்பட்டபோது, அது தங்களின் உலகளாவிய சந்தை வாய்ப்புகளையும், ஆதிக்கத்தையும் பாதிக்குமென ஐரோப்பிய நாடுகள் அச்சமடைந்தன.
அதேவேளையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதீத தலையீட்டைக் குறைப்பதற்காக சீனாவுடனான தனது மூலோபாய உறவை ரஷ்யா மேலும் பலப்படுத்தத் தொடங்கியது.
இவ்வாறு, ட்ரம்பின் இந்த ஒரேயொரு ஆசிய விஜயமானது சர்வதேசக் கூட்டணிகளின் கட்டமைப்பையே முற்றாக மாற்றி அமைக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
முக்கியமாக, இந்த இருதரப்பு நெருக்கமானது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் பிராந்திய சக்திகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சீனாவுடனான அமெரிக்காவின் இந்த தற்காலிக பொருளாதார இணக்கப்பாடு, ஆசியாவில் புதியதொரு மூலோபாய சமநிலையை நோக்கி பிராந்திய நாடுகளை நகர்த்தியதுடன், தங்களின் சொந்த பொருளாதார தற்காப்பு வியூகங்களை மறுபரிசீலனை செய்யவும் தூண்டியது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீன விஜயமானது வெறும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுடன் முடிவடைந்து விடாமல், இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய பூகோள அரசியல் ஒழுங்கை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.
வல்லரசுப் போட்டிகள் தீவிரமடைந்து வரும் தற்காலச் சூழலில், உலக அமைதியும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இந்த இரு மாபெரும் நாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளன என்பதை இந்த விஜயம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியது.
பரஸ்பர அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், உலகை வழிநடத்த வேண்டுமாயின் தங்களுக்குள் இணக்கப்பாட்டைப் பேண வேண்டும் என்ற யதார்த்தத்தை இரு நாட்டுத் தலைமைகளும் ஒப்புக்கொண்ட ஒரு வரலாற்றுப் பதிவாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும், ட்ரம்ப், ஷி ஜின்பிங்கின்; சந்திப்பு வெறுமனே பூகோள அரசியல் மாறுதல்கள் என்பதற்கு அப்பால் அவர்களின் தனிப்பட்ட அதிகாரத்தை தக்கவைக்கும் தன்னலத்தைக் கொண்டது என்பதும் முக்கியமானது.





