வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு
2016 ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும்
லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சுமார் 88 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கமைய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
இதன்போது நீதிபதிசந்தேக நபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் 27-03-2026 அன்று லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சுமார் 88 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கமைய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மன்றில் ஆஜராகியிருந்தார். அவரிடத்தில் குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை பிரதிவாதியிடம் கையளிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் கீழ், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நன்மை பயக்கும் வகையில், உர நிறுவனத்தின் களஞ்சியசாலைக்குத் தரைவிரிப்பினை இடும் பணிக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் அரசாங்கத்துக்கு சுமார் 8,859,708 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 70 ஆவது உப பிரிவின் கீழ், ஊழல் என்னும் குற்றத்தைச் செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் பிரதிவாதிக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பான முழுமையான விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெறுமென நீதிமன்றத்தினால் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.





