அவசர நிலக்கரி கொள்வனவின் போதும் பாரிய மோசடி - எதிர்க்கட்சித்தலைவர் சஜித்
பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாகவே நாங்கள் நம்புகிறோம். அதனால் இதுதொடர்பில் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூற முடியுமான வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவசர நிலக்கரி கொள்வனவின்போதும் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. அதனால் இதுதொடர்பில் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூற க்கூடிய வெளிப்படையான விசாரணையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவரச நிலக்கரி கொள்வனவின்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நிலக்கரி மோசடி தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்துகொண்டிருக்கின்றன, குறிப்பாக நிலக்கரி கொள்வனவுக்கான அவசர விலைமனு கோரலின்போது, நிலக்கரி விநியோகிப்பதற்காக அரசாங்கம் தெரிவு செய்திருந்த நிறுவனம், நிலக்கரி விநியோக்கும் இயலுமையை ஒருபோதும் காண்பித்ததில்லை. நிலக்கரி விநியோகிப்பதற்கு இருக்கவேண்டிய தகுதிகள் இல்லாத நிறுவனத்தையே அரசாங்கம் தெரிவு செய்திருக்கிறது.
அத்துடன் அவரச நிலக்கரி கொள்வனவுக்கு செல்வதற்கு ஏற்பட்ட பல காரணங்கள் தற்போது வெளிவந்தண்ணம் உள்ளன. விசேடமாக நிலக்கரி கொள்வனவு செய்யும் நிறுவனத்துக்கு இருக்கவேண்டி தகுதிகள் தொடர்பான நிபந்தனைகளை அரசாங்கம் இலகுபடுத்தியன் காரணமாகவே தகுதியற்ற நிறுவனங்கள் முன்வர காரணமாகும். நிலக்கரி கொள்வனவின்போது கடைப்பித்துவரும் முறையில் ஏற்பட்டுவந்த மோசடியை நிறுத்துவதற்கே நிபந்தனைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அரசாங்கம் நிலக்கரி கொள்வனவுக்காக தெரிவு செய்த நிறுவனம் கொண்டுவந்த நிலக்கரி மிகவும் தரம் குறைந்தது என மின் உற்பத்தி நிலைய அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிறுவனம் உரிய காலத்துக்கு தேவையான நிலக்கரி தொகையை கொண்டுவர முடியாமல் போனமையாலே அரசாங்கத்துக்கு அவசர நிலக்கரி கேள்விக்காேரலுக்கு செல்லவேண்டி ஏற்பட்டது. அந்த அவசர கேள்விக்காேரின்போதும் அரசாங்கம் முறையான தகுதிகளை பூரணப்படுத்தாத நிறுவனத்துக்கே இந்த நிலக்கரி கொள்வனவுக்கான அனுமதியை வழங்கி இருக்கிறது. இதன் மூலமும் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாகவே நாங்கள் நம்புகிறோம். அதனால் இதுதொடர்பில் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூற முடியுமான வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம், அவரச நிலக்கரி கொள்வனவுக்காக அரசாங்கம் தெரிவு செய்துள்ள நிறுவனமும் நாங்கள் கேட்டிருந்தத தகுதிகளை பூரணப்படுத்தியிருப்பதை காட்டியதில்லை. அதனால் நிலக்கரி மோசடி தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டபோதும் அது தொடர்பான இன்னும் பல தகவல்கள் வெளிவருகின்றன. அதனால் எதிர்காலத்தில் நிலக்கரி கொள்வனவு கேள்விக்கோரலின்போது வெளிப்படைத்தன்மையுடனான பொறிமுறையை கடைப்பிடிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். அதேநேரம் தரம்குறைந்த நிலக்கரி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்துக்கு முன் கொண்டுவர நாங்கள் விரைவாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.





