மின்கட்டண அதிகரிப்புக்காக இலங்கை மின்சார சபை தரவுகளில் உண்மை கிடையாது: மின்பாவனையாளர் சங்கம்
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்க கூடாது என்று மின்பாவனையாளர் சங்கம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
மின்கட்டண அதிகரிப்புக்காக இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள பரிந்துரைகள் மற்றும் அதற்கான தரவுகளில் உண்மைத்தன்மை கிடையாது. மின்சார சபை இலாபமடைகிறது ஆகவே மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்க கூடாது என்று மின்பாவனையாளர் சங்கம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
மின்கட்டணத்தை திருத்தம் செய்வதை மீள்பரிசீலனை செய்யும் 03 மாத காலத்தில் பிரதான நீர்மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்நிலைகளுக்கு கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சி குறைந்தமை, இலங்கை மின்சார சபையின் கடன்,எரிபொருள் விலையின் மாற்றம்,புதிய மின்சார சபைச் சட்டத்தின் பிரகாரம் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற சேவையாளர்களுக்கு செலுத்தப்பட்ட நட்டஈடு (ஆரம்ப செலவாக) உள்ளிட்ட காரணிகளால் ஆண்டின் முதல் காலாண்டில் மின்கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளது.
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், மின்கட்டண அதிகரிப்பு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
மின்கட்டண அதிகரிப்புக்காக இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள பரிந்துரைகள் மற்றும் அதற்கான தரவுகளில் உண்மைத்தன்மை கிடையாது. ஆகவே மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்க கூடாது என்று மின்பாவனையாளர் சங்கம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.





