பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் : துறைசார் மேற்பார்வை குழு அங்கீகாரம்
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உத்தேச சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்துக்கு முன்னதாக ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடைய மற்றும் ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்கின்ற எவரேனும் ஆளுக்கு இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்திலும் அதன் பின்னரும் அத்தகைய ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தலைமையில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெறவுள்ளது.
உத்தேச சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சட்டமூலத்தின் 3 ஆம் பிரிவிற்கு அமைய, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்துக்கு முன்னதாக ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடைய மற்றும் ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்கின்ற எவரேனும் ஆளுக்கு இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்திலும் அதன் பின்னரும் அத்தகைய ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
இக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரிஆராச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜே.டி. சூரியபண்டார ஆகியோர் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டனர்.





