பெண் பிரதிநிதித்துவத்துக்கும் எழுத்துமூலமாக வழங்குவதற்கு 43 அரசியல் கட்சிகளும் இணக்கம்
மாகாணசபைத் தேர்தலின் போது பொதுவான கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாகவும் இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் விரைவாக நடத்துவதற்கு சாதகமான வகையில் வேட்புமனுத்தாக்கலின் போது இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கும், பெண் பிரதிநிதித்துவத்துக்கும் எழுத்துமூலமாக 25 சதவீத ஒதுக்கீட்டை வழங்குவதற்கு 43 அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது. அடுத்த ஆண்டு சிலவேளை நடத்தலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்ட கருத்துக்கு கண்டனம் வெளியிட்டனர்.
மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு மக்கள் மயமான கூட்டு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சி,இலங்கைத் தமிழரசுக் கட்சி,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய மக்கள் முன்னணி,சர்வஜன அதிகாரம்,புதிய மக்கள் முன்னணி,அருனலு மக்கள் கட்சி, தொழிலாளர் தேசிய முன்னணி,மக்கள் சேவை கட்சி,தேசிய ஜனநாயக முன்னணி, தேசப்பற்று மக்கள் சக்தி,தேசிய விடுதலை மக்கள் கட்சி,தமிழ் ஐக்கிய முன்னணி. லங்கா சமசமாஜக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,முஸ்லிம் இடதுசாரி முன்னணி,பொதுஜன ஐக்கிய கட்சி,நவலங்கா சுதந்திர கட்சி, இலங்கை மக்கள் சக்தி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய ஐக்கிய கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.
மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாது. அடுத்த ஆண்டு சிலவேளை நடத்தலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்ட கருத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி அரசியலமைப்பின் பிரதான அங்கமாகவுள்ள மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவதற்கு சாதகமான வகையில் வேட்புமனுத்தாக்கலின் போது இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கும், பெண் பிரதிநிதித்துவத்துக்கும் 25 சதவீத ஒதுக்கீட்டை வழங்குவதற்கு 43 அரசியல் கட்சிகளும் எழுத்துமூலமாக இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
மாகாணசபைத் தேர்தலின் போது பொதுவான கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாகவும் இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிக்கமைய மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டனர்.





