அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுரகுமார சந்திப்பு
மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.
நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கிடையிலான சந்திப்பு 19-03-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த {ஹலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் வருகை தந்துள்ள தூதுக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





