Breaking News
கனடா முழுவதும் கடும் குளிர்: மின்சார நிறுவனங்களுக்கும் விமான சேவைகளுக்கும் பெரும் அழுத்தம்
விமான நிறுவனங்கள் பல விமானங்களை தாமதப்படுத்தவும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளன.
கனடா முழுவதும் நிலவும் கடும் குளிர் காரணமாக, மின்சார சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன. விமான நிறுவனங்கள் பல விமானங்களை தாமதப்படுத்தவும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளன.
அட்லாண்டிக் மாகாணங்களிலிருந்து ப்ரேரி பகுதிகள் வரை, மக்கள் கடும் குளிரை சமாளிக்க வீடுகளுக்குள் தங்கியுள்ளனர். குறிப்பாக ப்ரேரி பகுதிகளில் காற்றழுத்தத்துடன் கூடிய வெப்பநிலை மைனஸ் 55 பாகை செல்சியஸ் வரை குறையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





