வடமாகாண தைப்பொங்கல் நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுர பங்கெடுப்பு
தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
வேலணை துரையப்பா , ஐய்யனார் கோயில் மைதானத்தில் இன்று பகல் 02 மணியளவில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் உற்சவத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துக் கொள்ளவுள்ளார்.
தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இன்று 10 மணிக்கு மன்னார் கொன்னையன் குடியிருப்பு காற்றாலைத் திட்டத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு மன்னார் சவுத்பார் காற்றாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (15) வேலணை துரையப்பாஇ ஐய்யனார் கோயில் மைதானத்தில் பகல் 02 மணியளவில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் உற்சவத்தில் ஜனாதிபதி கலந்துக் கொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாலை 04 மணிக்கு மானிப்பாய் மருதடி விநாயகர் கோயில் வளாகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக வடக்கு மாகாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் உற்சவத்தில் ஜனாதிபதி கலந்துக் கொள்ளவுள்ளார்.
நாளை (16) மீசாலை – சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் காலை 09.30 மணியளவில் நடைபெறவுள்ள 'தமக்கான இடம் அழகிய வாழ்க்கை' இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியமர்த்தும் வீட்டுத் திட்ட நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார். இதன்போது பயனாளர்களுக்கு ஜனாதிபதி நிவாரண நிதி காசோலைகளை வழங்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் நாளை பகல் 02 மணிக்கு நடைபெறவுள்ள நச்சு போதைப்பொருட்களுக்கு எதிரான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய கருத்திட்ட நிகழ்வில் ஜனாதிபதி கலந்துக் கொண்டு விசேட உரையாற்றவுள்ளார்.





