பேஷோர் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டவர் பலி
இரவு 11:30 மணியளவில் ஒருவர் காவலில் இருப்பதாகக் காவல்துறையினர் அறிவித்தனர்.
ஒட்டாவா நகரின் பேஷோர் சுற்றுப்புறத்தில் உள்ள பென்னி டிரைவில் திங்கள்கிழமை மாலை ஒருவர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பில் சந்தேக குற்றவாளி ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதல் பதிலளிப்பவர்கள் மாலை 6:45 மணியளவில் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏற்பட்ட காயத்தால் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11:30 மணியளவில் ஒருவர் காவலில் இருப்பதாகக் காவல்துறையினர் அறிவித்தனர்.பாதிக்கப்பட்டவர் அல்லது சந்தேக குற்றவாளியைப் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்டவரின் உறவினர்களை தொடர்பு கொள்ளும் பணியில் இருப்பதாக காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு தெரிவித்தனர்.





