Breaking News
நேபாளம் மீண்டும் மன்னராட்சி கோரி பிரமாண்ட பேரணி
நேபாளத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த இளந்தலைமுறையினர் போராட்டத்தையடுத்து, முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான அரசு பதவி விலகியது.
நேபாளத்தில், வருகிற மார்ச் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மன்னராட்சிக்கு ஆதரவு தெரிவித்து அங்கு மாபெரும் பேரணி நடைபெற்றது.
நேபாளத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த இளந்தலைமுறையினர் போராட்டத்தையடுத்து, முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான அரசு பதவி விலகியது. இதையடுத்து, இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அந்நாட்டில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, ஊழல், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றுக்கு ஒரே தீர்வு மன்னராட்சி மட்டுமே என கூறி, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அந்நாட்டு தலைநகர் காத்மாண்டுவில் நேற்று பிரமாண்ட பேரணியை நடத்தினர்.





