இலங்கை - நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு
2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நியூஸிலாந்தின் அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் பிரவுன்லீ இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தையும் நினைவுகூர்ந்தார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது அண்மையகால உலகளாவிய மற்றும் பிராந்திய நிலைவரங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுன் 3 ஆம் திகதி வரை நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார்.
அதன்படி நியூஸிலாந்தை சென்றடைந்த அமைச்சர் விஜித்த ஹேரத், அந்நாட்டின் பாரம்பரிய 'மௌரி' முறைப்படி வரவேற்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து நியூஸிலாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜெர்ரி பிரவுன்லீயை சந்தித்த அமைச்சர் விஜித்த ஹேரத், வர்த்தகம், கல்வி மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நியூஸிலாந்தின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் பிரவுன்லீ இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தையும் நினைவுகூர்ந்தார்.
அதேவேளை நடைபெற்ற நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது அரசியல், வர்த்தகம், விளையாட்டு, ஆட்சி நிர்வாகம் மற்றும் நியூஸிலாந்தில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதுமாத்திரமன்றி அண்மையகாலத்தில் பதிவான உலகளாவிய மற்றும் பிராந்திய நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.





