இலங்கையை வந்தடைந்த இந்திய இராணுவ தளபதி
இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே மற்றும் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே ஆகியோர் இந்திய இராணுவ தளபதியை வரவேற்றனர்.
இந்திய - இலங்கை இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தனது பாரியார் திருமதி சுனிதா திவேதியுடன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 07-01-2026 அன்று நாட்டை வந்தடைந்தார்.
இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே மற்றும் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே ஆகியோர் இந்திய இராணுவ தளபதியை வரவேற்றனர்.
தனது விஜயத்தின் போது இந்திய இராணுவ தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இக்கலந்துரையாடல்களில் பயிற்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
இரு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான தொழில்முறை தொடர்பாடல்களை மேலும் வலுப்படுத்துவதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இந்த சந்திப்புகளின் முக்கிய நோக்கமாகும். இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.





