ஒரு இலட்சம் டொலர்கள் வழங்கிய சீன அரசாங்கம்
பலர் உயிரிழந்திருப்பதுடன் பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இவ்வனர்த்தத்தின் விளைவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் துயரத்தில் நாம் பங்கெடுத்துக்கொள்கிறோம்.
இலங்கை மக்களுக்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் சீன அரசாங்கத்தினால் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவியும், 10 மில்லியன் ஆர்.எம்.பி பெறுமதியான நிவாரணப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
' தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பு மற்றும் உதவி வழங்கல் தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் ' தித்வா ' சூறாவளியின் விளைவாக ஏற்பட்ட மிகமோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பவற்றால் பலர் உயிரிழந்திருப்பதுடன் பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இவ்வனர்த்தத்தின் விளைவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் துயரத்தில் நாம் பங்கெடுத்துக்கொள்கிறோம்.
இவ்வேளையில் இலங்கை மக்களுக்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு 100,000 டொலர்கள் உடனடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையிலுள்ள வெளிநாட்டு சீன சங்கத்துடன் இணைந்து சீன வர்த்தக சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நன்கொடை சேகரிப்பு முயற்சியின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக்கூடியவகையில் 10 மில்லியன் ரூபா நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உறுதியான தலைமைத்துவத்தின்கீழ், சர்வதேச சமூகத்தின் கூட்டிணைந்த உதவிகள் மூலம் இந்தப் பேரனர்த்த்ததிலிருந்து இலங்கை மக்கள் மீண்டெழுவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எதிவருங்காலங்களில் அம்மக்கள் தமது வீடுகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





