Breaking News
ஒன்ராறியோ தென்மேற்கு ஸ்டேபிள்ஸ் பகுதியில் வாகனம் மோதிய விபத்தில் நான்கு பேர் காயம்
ஒன்ராறியோ மாகாண காவல்துறையினரின் கூற்றுப்படி, வாகனத்தில் இருந்த நான்கு பேர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒன்ராறியோ தென்மேற்கு ஸ்டேபிள்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாகனம் மோதியதில் நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதில் காயமடைந்த 7 வயது சிறுவன் உட்பட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோ மாகாண காவல்துறையினரின் கூற்றுப்படி, வாகனத்தில் இருந்த நான்கு பேர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் பயணித்தவர்களில் ஒருவர் 7 வயது சிறுவன் ஆவார்.
வீட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கவுண்டி சாலை 8 இல் நெடுஞ்சாலை 77 இல் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





