நாட்டில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் 1 மணிநேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு
உயர் அழுத்த மின் கடத்தல் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் அதிர்வெண் சமநிலையின்மை காரணமாகவே கடந்த சனிக்கிழமை (17) நாடளாவிய ரீதியில் மின்விநியோக தடை அமல்படுத்தப்பட்டது.
மின் உற்பத்தி நிலையங்களில் கோளாறுகள் ஏற்படும்போது, அவை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பி மின் உற்பத்தியைத் தொடங்குவதற்குச் சில நாட்கள் தேவைப்படுகின்றன. முழுமையான மின் கட்டமைப்பு முடங்குவதைத் தவிர்க்கும் வகையில் நாட்டில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் 1 மணிநேரம் சுழற்சி முறையில் மின் தடை அமல்படுத்தப்படுகிறது என தேசிய மின்கட்டமைப்பு நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் புத்திக சமரசேகர தெரிவித்தார்.
மின்சார தேவையை கட்டுப்படுத்தும் பொருட்டு நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு 1,2,3,4 என்று வகைப்படுத்தப்பட்ட நான்கு வலயங்களுக்கு அமைய மாலை 04 மணிமுதல் இரவு 09 மணிவரை தலா ஒரு மணிநேர மின்விநியோக தடையை அமுல்படுத்த முன்வைத்த முன்மொழிவுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 19-10-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, உயர் அழுத்த மின் கடத்தல் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் அதிர்வெண் சமநிலையின்மை காரணமாகவே கடந்த சனிக்கிழமை (17) நாடளாவிய ரீதியில் மின்விநியோக தடை அமல்படுத்தப்பட்டது.இதன்போது மின் உற்பத்திக் கருவிகளுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்புத் தொகுதிகள் தானாகவே தொழிற்பட்டு மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்தன.
மின்சார கட்டமைப்பை மீள சீரமைக்கும் பணிகளின் போது,கூரைமேல் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின் உற்பத்தியாளர்களை தற்காலிகமாக தமது அமைப்புகளைத் துண்டிக்குமாறு வலுசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்தது.





