கார்த்திகை தீபம் விவகாரம்: திமுகவின் பாதையில் தவெக அரசு! அண்ணாமலை கடும் தாக்கு
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தவெக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அண்ணாமலை சாடியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீப விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் அனல் பறக்கும் விவாதமாக மாறியுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக அரசின் அணுகுமுறையையே பின்பற்றி வருவதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தவெக அரசு தன்னை ஒரு 'கடவுள் மறுப்பு சார்ந்த அரசாக' முன்னிறுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் பாரம்பரிய முறைப்படி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தவெக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அண்ணாமலை சாடியுள்ளார்.
தீபம் ஏற்றும் வழக்கம் மத நம்பிக்கையுடனும் பாரம்பரியத்துடனும் பின்னிப் பிணைந்தது என்று குறிப்பிட்ட அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் இந்த விவகாரத்தை அரசு தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.





