கிரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல் ஜானகி சிறிவர்த்தனவுக்கு 20வரை விளக்கமறியல்
எதிர்காலத்தில் மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிரிஷ் நிறுவனத்தின் முன்னால் பணிப்பானர் ஜானகி சிறிவர்த்தனவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் 06-11-2026அன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவுக் பிணை வழங்கப்பட்டிந்த போதிலும் கொழும்பு நிரந்தர மூவரங்கிய மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மற்றொரு வழக்கு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, கடந்த 3ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் நாமல் ராஜபக் ஷவுக்குப் பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், கொழும்பு நிரந்தர மூவரங்கிய மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 'எயார் பஸ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பான மற்றொரு வழக்கு விசாரணை காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேல்நீதிமன்றத்தின் குறித்த உத்தரவிற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷ திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணை தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஜா பண்டார மேலதிக விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து நீதிமன்றத்தில் பல்வேறு சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
கொழும்பு பிராந்திய செயலாளர் மற்றும் முன்னாள் காணி ஆணையாளர் உள்ளிட்ட பல முக்கிய சாட்சிகளிடமிருந்து இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, 4ஆவது சந்தேக நபரால் கையொப்பமிடப்பட்ட ஆவணமொன்றின் பிரதியே கைரேகை மற்றும் கையெழுத்துப் பரிசோதனைக்காக அரச இராசயணப் பரிசோதகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மூல ஆவணங்கள் அவசியமென அவர் அறிவித்துள்ளதாகவும் உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஜா பண்டார சுட்டிக்காட்டினார்.
குறித்த மூல ஆவணம் தற்போது கொழும்பு மேல்நீதிமன்ற இலக்கம் 7 இன் கட்டடத் தொகுதியில் உள்ள மற்றொரு வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அந்த வழக்கின் தரப்பினர் அல்லாத காரணத்தினால் அதனை நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
எனவே, சம்பந்தப்பட்ட ஆவணத்தை ஒரு நாளுக்குள் அரச இராசயணப் பரிசோதகருக்கு அனுப்பி, மீண்டும் நீதிமன்றத்திடம் கையளிக்கும் வகையில் உரிய உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கோரினார்.
தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்ட நீதவான், இது தொடர்பில் தெளிவான முறையில் எழுத்துமூலம் நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், வழக்கில் 3ஆவது சந்தேக நபரான கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்த்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தமது கட்சிக்காரருக்காக பிணை மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.





