பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக்குக்கு வீட்டிலிருந்து உணவு
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாஷிக் தாக்கல் செய்த மனு 06-11-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக்குக்கு, வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்வதற்கும் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கும் தற்போது வழங்கப்பட்டுள்ள வசதிகளை விட கூடுதல் வசதிகளை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாஷிக் தாக்கல் செய்த மனு 06-11-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இவ்வாறு அறிவித்துள்ளது.
இந்த மனு எம்.சி. எல்.பி. கோபால்தவ மற்றும் அன்வலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுரேன் ஞானராஜ் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், மனுதாரருக்கு வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்வதற்கும் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கும் தற்போது இருப்பதை விட கூடுதல் அனுமதி,அணுகலை வழங்குமாறு எதிர்வாதி தரப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்தக் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்தால் இந்த மனுவின் மூலம் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரண உத்தரவுகள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் சட்டத்தரணி ஞானராஜ் குறிப்பிட்டார்.
அப்போது நீதிபதிகள் அமர்வு அரச தரப்பு சட்டத்தரணி அறிவுறுத்துகையில், இந்தக் கருத்துக்கள் சம்பந்தமாக எதிர்வாதிகளிடம் விசாரித்து அது குறித்த அவர்களின் நிலைப்பாட்டை வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தினர்.
மனுதாரர் கோரும் கோரிக்கை யாதெனில், டுபாய் ராஜ்யத்திலிருந்து இந்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாஷிக் தடுத்து வைப்பதற்காக விடுக்கப்பட்ட தடுப்பு உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அதனை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடுமாறும் கோருகிறார்.
சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா மற்றும் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி சுரேன் ஞானராஜ் ஆகியோர் ஆஜராகினர்.





