அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயக கட்சி அமோக வெற்றி: எலான் மஸ்க் நாடாளுமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் நிலை
ரஷ்யாவுடனான மஸ்க்கின் தொடர்புகள் மற்றும் உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையின் செயல்பாடுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாத எலான் மஸ்க் அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக மஸ்க் செலவிட்ட 445 மில்லியன் டொலர் தேர்தல் நிதியும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. குறிப்பாக, டெக்சாஸ் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி மாநில அளவிலான முக்கியப் பதவிகளைக் கைப்பற்றியது.
அரசாங்கத்தில் மஸ்க்கின் பங்கு, பல பில்லியன் டொலர் மதிப்பிலான அரசாங்க ஒப்பந்தங்கள் மற்றும் நலன் முரண்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுடனான மஸ்க்கின் தொடர்புகள் மற்றும் உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையின் செயல்பாடுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மஸ்க்கின் நிறுவனங்களின் பங்குகளின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. அவரது நிறுவனங்களின் எதிர்கால விரிவாக்க திட்டங்களில் டெக்சாஸ் மாநிலம் முக்கியப் பங்கு வகிப்பதால், அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமும் கவனத்தைப் பெற்றுள்ளது.





