சீன பிரஜைகளின் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் சீன தூதரகம் அறிக்கை
இலங்கையில் வசிக்கும் சீனப் பிரஜைகள் தங்களது பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
சீன பிரஜைகளின் மரணம் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், அதில் இச்சம்பவம் தொடர்பில் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் துல்லியமான தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக உடனடியாக விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இலங்கையில் வாழும் சீனப் பிரஜைகளின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை பொலிஸாரிடம் சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இலங்கையில் வசிக்கும் சீனப் பிரஜைகள் தங்களது பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்குமாறும், அவசர காலங்களில் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிப்பதோடு தூதரகத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





