இந்திய ஜெய்சங்கருடன் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது கூட்டத் தொடர்பில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜேத் ஹெரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்பையும், நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனது எக்ஸ் தளத்தில் இந்த சந்திப்பு தொடர்பில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், 'அமெரிக்காவில் ஐ.நா. பொதுசபை கூட்டத் தொடரின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்பையும், நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர். நேற்றைய தினம் ஜனாதிபதி பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். மேலும் ஜனாதிபதி தனது இந்த விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடனும் பல உலகத் தலைவர்களுடனும் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.