உக்ரைன் ராணுவ நிலையத்தின் மீதான ரஷ்யா தாக்குதலில் 41 பேர் பலி
ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் செயலியில், இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷன்சில் உள்ள ஒரு கட்டிடம் பகுதியளவில் அழிக்கப்பட்டு, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டதாகக் கூறினார்.
இரண்டு ரஷ்ய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மத்திய உக்ரைனில் உள்ள கல்வி நிலையம் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனையைத் தாக்கியதில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 180 பேர் காயமடைந்தனர் என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பொல்டாவா பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் செயலியில், இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷன்சில் உள்ள ஒரு கட்டிடம் பகுதியளவில் அழிக்கப்பட்டு, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டதாகக் கூறினார். இடிபாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட்டனர்.
உக்ரைனின் சமூக ஊடக புகைப்படங்கள் பல உடல்கள் தரையில் கிடப்பதைக் காட்டியது. அவை தூசி மற்றும் குப்பைகளால் மூடப்பட்டிருந்தன.பின்னணியில் கடுமையாக சேதமடைந்த கட்டடம் தெரியும். இந்த படங்களின் நம்பகத்தன்மையை ராய்ட்டர்சால் இன்னும் சரிபார்க்க முடியவில்லை.





