மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர் பாதுகாப்புக்காக அவசர கால நிதி
மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தூதரங்கள் ஊடாக இலங்கையர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவைப்படும் அவசரமாகத் தேவைப்படும் வசதிகளை மேற்கொள்ளவதற்காக அங்குள்ள ஒவ்வொரு இலங்கைத் தூதரகங்களுக்கும் அவசரகால நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தூதரங்கள் ஊடாக இலங்கையர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளன.
தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் சூழல் நிலவி வருகின்ற போதிலும், இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதில் எந்தவிதமான தடைகளும் விதிக்கப்படவில்லை.
இதன் அடிப்படையில் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும், இலங்கைத் தூதரங்களும் இணைந்து தொடச்சியாகக் கண்காணித்து வருகின்றன. மேலும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்துத் தூதரங்களும் தயார் நிலையில் இருக்கின்றது என்றார்.





