மருதானை – பெலியத்த ரயிலில் ரி56 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு
காலை 6.30 மணிக்கு மருதானையில் இருந்து புறப்பட்ட புகையிரதம் செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் 12.15 மணியளவில் பெலியத்தை வந்தடைந்தது.
மருதானையில் இருந்து பெலியத்த நோக்கிப் பயணிக்கும் புகையிரத பெட்டியின் முதுகுப்பையில் வைக்கப்பட்டிருந்த 57 தோட்டாக்களைப் பெலியத்த புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
காலை 6.30 மணிக்கு மருதானையில் இருந்து புறப்பட்ட புகையிரதம் செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் 12.15 மணியளவில் பெலியத்தை வந்தடைந்தது.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரியின் வழக்கமான பெட்டி சோதனையின் போது கருப்பு நிற பை கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்படுவதற்கு சற்று முன்பு, மூன்றாம் வகுப்பு பெட்டி எண் 798 இல் இரண்டு பயணிகள் தங்கள் இருக்கைக்கு அடியில் பையை விட்டுவிட்டு இறங்கினர். ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தபோது, டி56 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ஒரு மேகசின் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தங்காலை பிரிவு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பெலியத்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





