Breaking News
        
      டோனி வேக்ஹாம் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடாரின் 16வது முதல்வராக பதவியேற்பு
பதவியேற்பு விழா புதன்கிழமை காலை செயின்ட் ஜான்சில் உள்ள கவர்ன்மெண்ட் ஹவுசில் நடைபெற்றது.
 
        
டோனி வேக்ஹாம் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடாரின் 16வது முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு அந்த மாகாணத்தில் புரோக்ரெசிவ் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
வேக்ஹாம் அக்டோபர் 14 அன்று நடைபெற்ற மாகாணத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
பதவியேற்பு விழா புதன்கிழமை காலை செயின்ட் ஜான்சில் உள்ள கவர்ன்மெண்ட் ஹவுசில் நடைபெற்றது.
அதேவேளையில் அவரது முதல் அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்றனர். பல புரோக்ரெசிவ் கன்சர்வேட்டிவ் சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கியமான மற்றும் பல்வேறு துறைகளின் பொறுப்புகளை ஏற்றனர்.





 
  
