2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்: சாகர காரியவசம்
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவே போட்டியிடுவார்
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவே போட்டியிடுவார்.தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் 27-01-2026அன்று நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டின் சமூகக்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை, ஊழலற்ற சூழல் மற்றும் ஜனநாயக ஆட்சி ஆகிய சிறந்த இலட்சினங்களை அடிப்படையாகக் கொண்டு தான் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வார்கள்.கடந்த காலங்களில் அவ்வாறான தன்மை தான் காணப்பட்டது.
ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் ஊழல் மோசடி மிதமிஞ்சிய வகையில் காணப்படுகிறது. சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை.
நிலக்கரி கொள்வனவில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது அது தொடர்பிலும் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த அரசாங்கங்களை ஊழல் மோசடி என்று விமர்சித்துக் கொண்டு இந்த அரசாங்கம் ஊழல் மோசடியை இரகசியமான முறையில் முன்னெடுக்கிறது.
ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் தேசியத்துக்கு எதிராக செயற்படுகிறார்கள். மதங்களையும், நாட்டின் பாரம்பரியத்தையும் அவமதிக்கும் வகையில் தான் பேசுகிறார்கள். இது தற்போதைய இளம் தலைமுறையினருக்கு தவறான எடுத்துக்காட்டாக அமையும்.
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவே போட்டியிடுவார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்ததன் தவறை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். அந்த தவறை இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் திருத்திக்கொள்வார்கள் என்றார்.





