Breaking News
'GovPay' முறைமை மூலம் அதிகமான கொடுப்பனவுகள்
வரி, அபராதம், பயன்பாட்டுக் கட்டணங்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் பிற சேவை கட்டணங்கள் உள்ளிட்ட அரசாங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு கொடுக்கல் வாங்கல்களுக்காக, வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பைகள் மூலம் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் இந்த கட்டண வசதி மூலம் பணம் செலுத்த முடியும்.
இலங்கை அரச சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டண வசதிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட 'GovPay' முறைமை மூலம், 750 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வரி, அபராதம், பயன்பாட்டுக் கட்டணங்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் பிற சேவை கட்டணங்கள் உள்ளிட்ட அரசாங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு கொடுக்கல் வாங்கல்களுக்காக, வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பைகள் மூலம் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் இந்த கட்டண வசதி மூலம் பணம் செலுத்த முடியும்.
அதன்படி, வரையான காலப்பகுதியில், 38,378 கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக 760,834,489 ரூபாய் அரச கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 184 அரச நிறுவனங்கள் இந்தச் செயற்திட்டத்தில் இணைந்துள்ளன.