ஓய்வுபெற்ற வழக்கறிஞருக்கு கனடாவில் 10 ஆண்டுகள் சட்டத் தொழில் புரிய தடை
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு கனடாவின் எந்தப் பகுதியிலும் வழக்கறிஞராகப் பணியாற்ற மாட்டேன் என்று மெக்டவிஷ் உறுதியளித்துள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள சால்மன் ஆர்ம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் வழக்கறிஞர் இயன் ஃபிராங்க் மெக்டவிஷ், தனக்கு லீகல் எய்ட் பிரிட்டிஷ் கொலம்பியா (Legal Aid B.C.) எனும் சட்ட உதவி அமைப்பின் மூலம் ஒதுக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பத்து ஆண்டுகள் சட்டத் தொழில் புரியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா வழக்கறிஞர் சங்கத்துடன் (LSBC) மேற்கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு கனடாவின் எந்தப் பகுதியிலும் வழக்கறிஞராகப் பணியாற்ற மாட்டேன் என்று மெக்டவிஷ் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த முடிவு எடுக்கப்பட்டபோது அவருக்கு 79 வயது. அவர் ஏற்கெனவே 2024ஆம் ஆண்டில் தனது வழக்கறிஞர் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதாக அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





