எயர் பஸ் கொடுக்கல் வாங்கல் பிணைப்பணம் அரசுடமை
நேற்று இந்தவழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயர் பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 2 ஆவது சந்தேகநபரான கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க விசாரணைக்கு ஆஜராகாது நீதிமன்றத்தைப் புறக்கணித்து வரும் அநிலையில் அவரது பிணைப்பணத்தை அரசுடமையாக்குவதற்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன 30-09-2026 அன்று உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபருக்கு பிணைவழங்கப்பட்ட சந்தரப்பத்தில் நீதிமன்றத்தால் சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியான பிரியங்கி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் சந்தேகநபருக்கு பிணையாளர்களாக முன்வந்து கையெழுத்திட்டிருந்தனர்.
எனினும் சந்தேகநபர் தற்போது அவுஸ்த்திரேலியாவுக்கு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் சந்தேகநபர் வழக்கு விசாரணைகளுக்காக ஆஜராகாமையினால் அவருக்கு எதிராக ஏற்கனவே பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்தவழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது பிணையாளர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி, இன்றைய தினம் 20 மில்லியன் ரூபா பணத்தை நீதிமன்றத்தில் செலுத்துவதற்குத் தயார் எனத் தெரிவித்தார். மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், நேற்றைய தினம் 20 மில்லியன் ரூபா பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும், எஞ்சிய 20 மில்லியன் ரூபா பிணைப்பணத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்குள் செலுத்தி முடிக்குமாறும் உத்தரவிட்டார்.





