18 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 21 நாட்களுக்குள் விசாரணையை நிறைவு செய்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாபர்நகரில் அமைந்துள்ள விசேட போக்சோ நீதிமன்றம், தனது 18 மாத மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயதுடைய நபருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம், குழந்தையின் தாய்வழி தாத்தா, பாட்டி வீட்டில் இடம்பெற்றது. தாயின் உறவினரான குற்றவாளி, குழந்தையை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 21 நாட்களுக்குள் வழக்கை முடிக்க, காவல்துறையின் விரைவான விசாரணையும், சாட்சிகளின் தகுந்த நேர ஒத்துழைப்பும் முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





