இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி கொழும்பு வருகிறார்
விவாதத்தின் இறுதி நாளான வெள்ளியன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 5 ஆம் தேதி சிறிலங்காவுக்கு அலுவல்பூர்வ வருகையை மேற்கொள்ளவுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதி நாளான வெள்ளியன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சம்பூர் மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இந்திய பிரதமரின் விஜயம் மேற்கொள்ளும் அதே நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் நிலைத்தன்மை காரணமாக வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் சிறிலங்காவுக்கு வருகை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் புதிய சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையமொன்றையும், மன்னாரில் 50 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையமொன்றையும் இரண்டு மாதங்களுக்குள் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்தார்.





