இயற்கை அனர்த்தங்களால் 611 பேர் உயிரிழப்பு
கன மழை பெய்த மேலும் பல பிரதேசங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை காணப்படுவதாக தேசியக கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தித்வா புயலால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 பேர் உயிரிழந்துள்ளதோடு, 213 பேர் காணாமல் போயுள்ளனர். உயிரிழந்தவர்களில் 232 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கன மழை பெய்த மேலும் பல பிரதேசங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை காணப்படுவதாக தேசியக கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில் 576 626 குடும்பங்களைச் சேர்ந்த 2 054 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 4390 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 69 635 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் 33 622 குடும்பங்களைச் சேர்ந்த 1,14, 126 பேர் 956 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை ருவான்வெல்ல - ரத்தாகல பிரதேசத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையால் சுமார் 11 குடும்பங்கள் தற்காலிக பாதுகாப்பு முகாமொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.





