சிறிலங்கா, தாய்லாந்து இடையே இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் பாங்கொக்கில் தொடக்கம்
2024 பிப்ரவரியில் தாய்லாந்தின் முன்னாள் பிரதமரின் சிறிலங்காவுக்கான அலுவல்பூர்வ வருகைக்குப் பின்னரும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எதிர்வரும் ஆலோசனைகள் மீளாய்வு செய்யும்.

சிறிலங்காவுக்கும், தாய்லாந்துக்குமிடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் 06 ஆவது சுற்று 2025 மார்ச் 25 ஆம் தேதி பாங்கொக்கில் உள்ள தாய்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் தாய்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான நிரந்தர செயலாளர் எக்சிறி பின்டாருச்சி ஆகியோர் இந்த ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்குவார்கள் என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆகஸ்டில் கொழும்பில் 5 வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் நடத்தப்பட்டதிலிருந்தும், 2024 பிப்ரவரியில் தாய்லாந்தின் முன்னாள் பிரதமரின் சிறிலங்காவுக்கான அலுவல்பூர்வ வருகைக்குப் பின்னரும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எதிர்வரும் ஆலோசனைகள் மீளாய்வு செய்யும்.