Breaking News
97 இந்திய மீனவர்கள் சிறிலங்கா சிறையில் உள்ளனர்: ஜெய்சங்கர்
இந்த விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையை எடுக்க சிறிலங்காவுடன் இந்தியா ஈடுபட முயற்சிக்கிறது என்று ஜெய்சங்கர் கூறினார்.

சிறிலங்காவில் தற்போது 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருவதாகவும், 3 பேர் விசாரணையை எதிர்நோக்கியுள்ளதாகவும், 11 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தில் (மாநிலங்களவை) தெரிவித்தார்.
இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மீன்பிடி படகுகளில் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவுவது உள்ளிட்ட நீண்டகால வழிகளை மத்திய அரசு கண்டுபிடித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையை எடுக்க சிறிலங்காவுடன் இந்தியா ஈடுபட முயற்சிக்கிறது என்று ஜெய்சங்கர் கூறினார்.