Breaking News
யால வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று காலை யால தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன் போது, சுற்றுலாப் பயணிகளுக்கு துரிதமாக யால தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்குள் செல்வதற்காக இணையத்தளம் வழியாக நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வனத்துறை நிர்வாகம் காட்டில் வற்றிப்போயுள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வேலைத்திட்டத்திலும் ஜனாதிபதி கலந்துக்கொண்டார்.


யால வனவிலங்கு சரணாலயம் என்பது இலங்கையில் இருக்கும் மிகப் பழையமான சரணாலங்களில் ஒன்று. குறைவான நிலப்பரப்பில் அதிகளவில் இலங்கை புலிகளை காணக்கூடிய இடமாகவும் இந்த சரணாலயம் விளங்கிறது.
இதன் காரணமாக பல வெளிநாட்டு சுற்றுலாப் பணிகள் இந்த சரணாலயத்திற்கு செல்ல அதிக அக்கறை காட்டுகின்றனர்.
ஜனாதிபதியுடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் யால சென்றிருந்தனர்.






