அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள்
அரசியலமைப்பின் 61 (1) இ , பிரிவின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் பிரஜைகளின் பதவி காலம் 2026.01.19 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் உறுப்பினர்களாக ஒஸ்டின் பெர்னாண்டோ , வசந்தா செனவிரத்ன, ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரை நியமிக்க பிரதமரும், எதிர்கட்சித் தலைவரும் பொது இணக்கப்பாட்டுடன் முன்வைத்த பிரேரணைக்கு சபாநாயகர் அனுமதியளித்தார்.
பாராளுமன்றத்தில் 23-01-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது சபைக்கு விசேட அறிவிப்பை முன்வைத்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
அரசியலமைப்பின் 61 (1) இ , பிரிவின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் பிரஜைகளின் பதவி காலம் 2026.01.19 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன்,சபாநாயகரின் பெயர் முன்மொழிவுடன் ஜனாதிபதியால் அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகள் மூவர் நியமிக்கப்படுவர்.
பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கலுபகே ஒஸ்டின் பிரனாந்து, கலாநிதி வசந்தா செனவிரத்ன மற்றும் உடுநுவர கம்பதிகே ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரின் நியமனம் சபைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது என்றார். இதன்போது சபையின் அனுமதியை பிரதமர் கோரியிருந்த நிலையில் சபாநாயகர் அதற்கு அனுமதியளித்தார்.





