புத்தர் சிலை சர்ச்சையை சுமுகமாக தீர்த்துக்கொள்வது பொருத்தமானது: நீதிமன்றம் பரிந்த்துரை
எவ்வாறாயினும் குறித்த பகுதியின் நிலைமை தொடர்பில் கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை களத்துக்கு அனுப்பி குறித்த கட்டுமானக்கலில் பிரச்சினை உள்ளதா என்பதை ஆராய்வது பொருத்தமானது என நீதிமன்றம் தீர்மானித்தது.
திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிவர்தன விஹாரையின் 'அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை' ( புத்தர் சிலை உள்ளிட்டவை ) அகற்ற கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவோடு தொடர்புபட்ட பிரச்சினையை, சுமுகமாக தீர்ப்பது பொருத்தமானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிவர்தன விகாரையின் விகாராதிபதி கல்யாண வங்ஷ திஸ்ஸ தேரர் தாக்கல் செய்த ரிட் மனு, நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான தம்மிக்க கணேபொல மற்றும் ஆதித்ய படபெந்தகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 19-11-2025 அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிமன்றம் மேற்படி பரிந்த்துரையை முன்வைத்தது.
எவ்வாறாயினும் குறித்த பகுதியின் நிலைமை தொடர்பில் கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை களத்துக்கு அனுப்பி குறித்த கட்டுமானக்கலில் பிரச்சினை உள்ளதா என்பதை ஆராய்வது பொருத்தமானது என நீதிமன்றம் தீர்மானித்தது. அதன்படி கடலோர பாதுகாப்புத் திணைக்கலத்தின் அதிகாரிகளை மீள களத்துக்கு அனுப்பி, அந்த பூமியில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த்து அரிக்கை பெற்ற பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்க, மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பினர் நேற்று நீதிமன்றில் இணக்கம் கண்டனர்.





