மாணவி வித்தியா படுகொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு விசாரணைகள் நிறைவு
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியர்சர்களான அச்சல வெங்கப் புலி, ப்ரியந்த பெர்ணான்டோ, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு முன் விசாரணைகள் இடம்பெற்று இவ்வாறு தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, மேன்முறையீடு குறித்த தீர்ப்புக்காக அவ்வழக்கு கால வரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியர்சர்களான அச்சல வெங்கப் புலி, ப்ரியந்த பெர்ணான்டோ, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு முன் விசாரணைகள் இடம்பெற்று இவ்வாறு தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று இந்த மேன்முறையீட்டின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது,இந்த சம்பவத்தில் மரண தண்டனையை விதிக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் எனும் மகாலிங்கம் சசிகுமாருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். மாணவி வித்யாவை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ய சதி செய்ததாக தனது சேவை பெறுநர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.