மல்வானை வீட்டையும் காணியையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சொந்தமாக்க பிரதமர் இணக்கம்
சசிந்து பெரேரா, குறித்த வீட்டையும், காணியையும், கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.
தொம்பே பிரதேச செயலகத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ள மல்வானை பகுதி வீடு மற்றும் காணியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளிதத்தை தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மல்வானை வீட்டில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.
பசில் ராஜபக்ஷவினுடையது என்று குறிப்பிடப்படும் சர்ச்சைக்குரிய மல்வானை வீட்டுக்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கடந்த வாரம் அனுமதியற்ற வகையில் நுழைந்து அங்கு தங்கினர். அந்த வீட்டையும், காணியையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த விடயம் குறித்து பிரதமருக்கும், மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், இடையில் 18-05-2026அன்று பிரதமர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சசிந்து பெரேரா, குறித்த வீட்டையும், காணியையும், கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், குழுவினர் உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு அரசாங்கம் சாதகமாக பதிலளித்துள்ளது. அந்தப் பதிலைக் கருத்தில் கொண்டு, இந்த நேரத்தில் மல்வானை வளாகத்திலிருந்து வெளியேற நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார்.





