ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்க்கட்சியினர் முறைப்பாடளிக்க முடியும் - அமைச்சர் அநுர கருணாதிலக
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் காணப்படுமாயின்; பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்க்கட்சியினர் முறைப்பாடளிக்க முடியும்.
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் காணப்படுமாயின்; பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்க்கட்சியினர் முறைப்பாடளிக்க முடியும். எரிபொருள் மற்றும் மின்விநியோகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சின் காரியாலயத்தில் 21-04-2026 அன்று அமைச்சுக்கான கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு மத்தியில் வலுசக்தி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எரிபொருளுக்கான விலைமனுகோரல்கள் செய்யப்பட்டுள்ளன.
பூகோள நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட வேண்டும். மின்விநியோகம் துண்டிக்கப்பட வேண்டும் என்றே எதிர்க்கட்சியினர் கருதுகிறார்கள்.அதனால் தான் மக்கள் மத்தியில் அச்சநிலையையும், தவறான நிலைப்பாட்டையும் ஏற்படுத்துகிறார்கள்.
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் காணப்படுமாயின்; பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்க்கட்சியினர் முறைப்பாடளிக்க முடியும்.எரிபொருள் மற்றும் மின்விநியோகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
நிலக்கரி குறித்து எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.ஆனால் ஆதாரத்துடன் உரிய தரப்பில் முறைப்பாடளிக்கவில்லை என்றார்.





