‘கருப்பு’ திரைப்படம் வெளியாகும் தகவல்
மே 14-ம் தேதி ‘கருப்பு’ வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்தது.
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், படக்குழு திங்கட்கிழமை அன்று வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக மே 14-ம் தேதி ‘கருப்பு’ வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்தது.
இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது. மே மாதத்தில் ‘கருப்பு’ படமும், ஜூலை மாதத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ‘கருப்பு’ படத்தில் இருந்து அடுத்த பாடல், ட்ரெய்லர் என வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.





