இலங்கைக்கு கடல்சார் பாதுகாப்பு ஏன் முக்கியம் என்று நன்கு புரிகிறது - அமெரிக்க இராஜதந்திரி
'இந்த முக்கியமான மையம் தெற்காசியாவை உலகளாவிய சந்தைகளுடன் எவ்வாறு இணைக்கின்றது என்பதும், இங்கு கடல்சார் பாதுகாப்பு ஏன் முக்கியமானது என்பதும் தெளிவாகியது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நடவடிக்கைகளைச் சென்று பார்வையிட்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர், இலங்கை முக்கியமான மையம் தெற்காசியாவை உலகளாவிய சந்தைகளுடன் எவ்வாறு இணைக்கின்றது என்பதும், இங்கு கடல்சார் பாதுகாப்பு ஏன் முக்கியமானது என்பதும் தனக்கு நன்கு புரிந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து இலங்கைத் துறைமுக அதிகாரசபை தலைவருடன் இணைந்து கொழும்புத் துறைமுக நடவடிக்கைகளைப் பார்வையிட்ட அமெரிக்க இராஜதந்திரி, 'இந்த முக்கியமான மையம் தெற்காசியாவை உலகளாவிய சந்தைகளுடன் எவ்வாறு இணைக்கின்றது என்பதும், இங்கு கடல்சார் பாதுகாப்பு ஏன் முக்கியமானது என்பதும் தெளிவாகியது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில், நாட்டுக்கு வருகைதந்திருக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
அந்தவகையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் உள்ளடங்கலாக நாட்டின் பொருளாதாரத்துறைசார் முக்கியஸ்த்தர்களைச் சந்தித்த செர்ஜியோ கோர், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதாரப் பங்காண்மை மற்றும் வணிகத்தொடர்புகளின் முழுமையான ஆற்றலை வெளிக்கொணர்வதற்கான வழிவகைகள் குறித்து அவர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
அதனைத்தொடர்ந்து இலங்கைத் துறைமுக அதிகாரசபை தலைவருடன் இணைந்து கொழும்புத் துறைமுக நடவடிக்கைகளைப் பார்வையிட்ட அமெரிக்க இராஜதந்திரி, 'இந்த முக்கியமான மையம் தெற்காசியாவை உலகளாவிய சந்தைகளுடன் எவ்வாறு இணைக்கின்றது என்பதும், இங்கு கடல்சார் பாதுகாப்பு ஏன் முக்கியமானது என்பதும் தெளிவாகியது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பாதுகாப்பான மற்றும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த வர்த்தகத்தை மேம்படுத்தவும், துறைமுக செயற்திறனை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் கூட்டாண்மை உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





