கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் கஞ்சாவுடன் இளைஞர் கைது
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான குஷ் கஞ்சா 36 தனித்தனி பொதிகளில் அடைக்கப்பட்டு தனது சாமான்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
தாய்லாந்தில் இருந்து வருகை தந்த சிறிலங்காப் பயணி ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து 05 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான சந்தேகக் குற்றவாளியின் உடைமைகளுக்குள் 05 கிலோ கிராம் 278 கிராம் குஷ் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடுத்துக் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான குஷ் கஞ்சா 36 தனித்தனி பொதிகளில் அடைக்கப்பட்டு தனது சாமான்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட பயணி, தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகக் குற்றவாளி தொடர்பில் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.





