பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் தமிழ்ச்சமூகத்துடன் உடன் நிற்போம்; கவுன்சிலர் மைக்கேல் தொம்ஸன்
கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனேடியத் தமிழர்கள், முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடனான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி கனடாவின் ஸ்கார்பரோ நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் தமிழ்ச்சமூகத்துடன் உடன்நிற்பதாக ஸ்கார்பரோ, 21 ஆம் வார்ட் கவுன்சிலர் மைக்கேல் தொம்ஸன் தெரிவித்துள்ளார்.
யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டைக்கோரி 'விழித்தெழு தமிழா' எனும் மகுடத்தில் 'பிஹைன்ட் மி பவுன்டேஷன்' எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு நிகழ்வு கடந்த 28-07-2025 அன்று கனடாவின் ஸ்கார்பரோ நகரில் அமைந்துள்ள அல்பர்ட் கம்ப்பெல் ஸ்கொயார் திறந்தவெளியரங்கில் நடைபெற்றது.
கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனேடியத் தமிழர்கள், முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர். அதன்படி இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஸ்கார்பரோ, 21 ஆம் வார்ட்டின் கவுன்சிலர் மைக்கேல் தொம்ஸன், அதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் தமிழ்ச்சமூகத்துடன் உடன்நிற்பதாக அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.